Monday, June 15, 2009

'கன'வலை-யில் ஒரு கவியலை !!

நிலை: ( முதுகலை ) கல்லூரி விடுதி, அன்றைய நிகழ்வுகளின் நினைப்பில்...
எழுதப்பட்ட வருடம்: 2001
குறிப்பு: தலைப்பில் குறிப்பிட்டதுபோல, காதல்-ஏற்கப்பட்டால் 'கனவின் அலை'யாகவும், மறுக்கப்பட்டால் 'கனமான வலை'யாகவும் மாறும்.. ஆக, மறுப்பின் பயத்தால் சொல்லவேண்டியதை சொல்ல முடியாமல் போனபோது எழுதபெற்றது...


பல நாட்களாக...
பல நிலைகளாக...
பல நினைவுகளாக...

வித்யாசமான அணுகுமுறையில்..
வித்யாசமான உணர்வுகளுடன் - ஏதாவது
வித்யாசமாக எழுத வேண்டும் - என்றெண்ணியதின்
விளைவால் விளைந்ததிந்த வித்யாசமான வரிகள்..

இந்த மாபெரும் முன்பக்கத்து வரிகளை எழுதவேன்,
இத்தனை தினங்களோ...

எத்தனை பாவப்பட்ட வெண்தாற்கள்,
நீலக்கறையோடு கசக்கியெறியப்பட்டனவோ !!
- இதையும் கற்பனையால் பார்க்கிறேன்..

கிறுக்கி கசக்கப்பட்ட வெண்தாள்கள்
கவிச்சோலையாய்.....
அவளின் தலைமுடியில்... பிரகாசிக்கிறது
வெண்ரோசாவாய்....

என் கைப்பிடியாகிய கவியாயுதத்திலிருந்து,
கவித்தாளுக்குள் கலைய மனமில்லாமல்,
கறையாமலிருந்ததால் - ஏற்பட்ட
உதறலில்,
கதறிச் சிதறிய
கருநீல மைத்துளிகள் - அவளின்
கரு'நீள'க்கண்களின் நீல மையாய்.

...................

ஆசையிருந்தும், அவளிடம் அன்பை சொல்லாமல்...
இப்படி,
கற்பனையால் மட்டுமே
விண்ணை எட்ட முடியும் - என்ற நிலையில்
கட்டுண்டு கிடக்கிறேன்.

இவண்,
கார்த்தி


2 comments:

  1. உங்களது பதிவு மிக அருமை கவிதைகள் நெஞ்ச தொட்டது, எனது நண்பர்களுக்கும் பரிந்துரை செய்து இருக்கிறேன், தமிழர்ஸில் வோட்டு போட்டாச்சு ..

    ;-)

    ReplyDelete
  2. சுரேஷ் நண்பரே.... பாராட்டுதலுக்கும், பரிந்துரைக்கும் மிக்க நன்றி !!!

    ReplyDelete