Monday, June 15, 2009

எ(ஏ)ன் காதல் !!!

நிலை: கல்லூரிவிடுமுறை ( முதுகலை )
எழுதப்பட்ட வருடம்: 2001
குறிப்பு: விடுமுறைவிட்டு, விடுதியில் நண்பியின் நினைவில்....................... நினைவிறுக்கங்கலின் நடுவில்..

வாழ்வா !!.. சாவா எதுவென்று தெரியாமல்...
வாலிபத்தில் ஒரு போராட்டம் - இந்த காதல் !

வெற்றி நிச்சயமென்று நிச்சயமில்லை..
ஆனாலும் -
நம்பிக்கையோடு.. இந்தப்பருவத்தில்,
வந்து விட்டது - இந்த காதல் !.

உணர்வுகளின் உந்துதல்..
உண்மையென்ற நம்பிக்கை..
அது -
பொய்யாகிப்போகும்வரை புரியாது - அதின்
இன்னொரு முகம்..

வெற்றி என்றும்,
தோல்வி என்றும்
புனையப்பட்டதால்..
காதலொன்றும் விளையாட்டல்ல....

அது - உணர்வுகளின் ஊற்று,
தோற்றாலும், செயித்தாலும்..
உயிருள்ளவரை வாழ்ந்தே இருக்கும்
உயிரில்......... இதுவே.. 'என் காதல்'

இவண்,
கார்த்தி

நினைவுத்துணை !!..

நிலை: கல்லூரிக்காலம் ( முதுகலை )
எழுதப்பட்ட வருடம்: 2001
குறிப்பு: விடுமுறையில், விடுதி விட்டு வீட்டிலிருந்து 'ஒரு' நண்பியை நினைத்து வரையப்பட்டது..

உன் உள்ளம் தேங்கிண்ணமோ..
வண்ணம் பாலன்னமோ..
நெஞ்சம் பூஞ்சோலையோ....
கண்கள் குற்றாலமோ !!!

நட்சத்திரங்களுக்கு நிலவு துணை...
நதிகளுக்கு கடல் துணை..
கிழமைக்கு ஞாயிறும்,
நல்லுழவனுக்கு வயலுமே துணை....
விதிக்கு மதி துணை...
சதிக்கு, விழிப்புள்ள ஆவல் துணை...
புகலுக்கு ஒழுக்கம் துணை...
ஆயிளுக்கு நல்லருள் துணை...

உன் நினைவென்றும்,
என் மனதின் மகிழ்வுக்கு துணையாகுமே....
என் துக்கங்களை தூளாக்குமே !....

இவண்,
கார்த்தி

காலம் பதில் சொல்லும் !

நிலை: கல்லூரிக்காலம் ( முதுகலை )
எழுதப்பட்ட வருடம்: 2001
குறிப்பு: என்னுயிர் நண்பர்களின் உயரிய உறவில் உருவானது.
காலத்தின் பதில் ??? : வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும் :) ( ஹா ஹா )

பார்க்க அழகானவள்,
பழக எளியவள்
நயமாய் பேசுவாள்
நாகரீகமாய் பழகுவாள்
தவறாய் பேசியதும் இல்லை
தலைவியாய் நினைத்ததும் இல்லை

ஆனாலும் ஏனோ !
நட்பாய் பழகியவளை
நாயகியாய் அவன் நினைத்தான்

அன்பான வார்த்தைகளின்
அர்த்தத்தை மாற்றினான்.

இதயத்தில் அவளை
சிறைவைத்த போதும்
காதலை கூறவுமில்லை - அவளின்
கற்பனையை கலைக்கவுமில்லை !

அன்புத்தங்கை,
அழகான அம்மா,
இவர்கள் பாசத்தில்
இளைப்பாறும் இவளுயிர்..

விடுதி சென்றது முதல்
வீடுவந்து சேரும் வரை..
அங்கு நடந்த செய்திகளை
அடுக்கடுக்காய் இறக்கிவைப்பாள்..

பருவமகன் ஒருவன்
பார்வையால் சீண்டினாலும்..
பயமின்றி கூறிடுவாள்
பாசமிகு பெற்றோரிடம்..

அவள் மறைத்து வைத்தது
எதுவுமில்லை...
அவளுக்கு மனதிற்குள் வைக்கவும்
தெரியவில்லை...

நடந்ததை..
நாடகமாய் உரைப்பவளுக்கு..
நண்பனை..
நாயகனாய் நினைப்பதை
உரைக்க மனமில்லை...

அவளுக்காகவுயிர்வாழும்
அன்பு மனங்கள்..
அதை ஏற்குமோ..
என்றவுள்ளச்சம்.

எதைக்கேட்டாலும்
எதிர்க்காது கொடுப்போர்
அன்பு மகளுக்கு,
ஆசை காதலனை
இணைத்து வைக்க
இசைய மாட்டார்களோ !
இல்லை.....
சாதி மத பேதத்தில்
சதைகளும் ஊறியதால்
சாமர்த்தியமாய் சாடுவார்களோ ?

எம்முடிவை எடுப்பார்கள்
எதுவும் புரியவில்லை
அவளுக்கு...

யோசித்தாள் பல நாட்கள்..

காதலை சொல்லி...
பெற்றவளின் மனதிற்கு
கசப்பூட்ட மனமில்லை..

நட்பெனும் காவியத்தை
காதலெனும் கைகொண்டு
கசக்கவும் விரும்பவில்லை..

இனிய பெற்றோரின்
இன்பத்திற்கு உயிர்கொடுக்கவும்....
நயமான நட்பிற்கு
நாகரீகமாய் கைகொடுக்கவும்..

எடுத்தாள் ஒரு முடிவை !
தடுத்தாள் பல நினைவை !
மறந்தாள் சில கனவை !
மாற்றினாள் அவன் மனதை !
தொடர்ந்தாள் நல் உறவை !

இதற்கு,
இனி,
'காலம் பதில் சொல்லும்'

இவண்,
கார்த்தி..

Sunday, May 10, 2009

ஒரு கனவின் நினைவு

நிலை: முதன்முதலாக விடுதிக்காற்றை சுவாசித்தபோது.......
வருடம்: 2001 (இளங்கலைக்கு பிறகு, முதுகலைக்கு முன்பு)
குறிப்பு: விடுதி சேர்ந்த மகிழ்வும், வீட்டின் பிரிவும் ஒருசேர...... ஒரு கதம்பமான உணர்வின் விளிம்பில்.......

ஒருமுறையேனும்...
அனுபவித்துவிட வேண்டும்,
'விடுதி வாழ்க்கை' - என்றுதான்
விளையாட்டாய் நினைத்தேன்.

கனவுகள் நனவாக
கைவந்து சேர்ந்ததாய்
காற்றாய் வந்தது
கடிதம்.... பாரதியார் பல்கலையிலிருந்து.

எழுந்து ஆடினேன்,
எம்பி எம்பி குதித்தேன்.

இரண்டு ஒன்று போனது.

அன்று,
புறப்பட்டேன் நான் போருக்கு..
படிப்'போருக்கு' - இடம்தரும்
பாரதியார் பல்கலைக்கு...
ஆயுதங்களாக பெட்டிபடுக்கையுடன்
ஆயத்தமானேன் - போருக்கு.

பெற்றோரின்
பாசவுறைகளுடன்...
அண்ணா அண்ணியின்
அறிவுரைகளுடன்...
உற்றார் உறவினரின்
ஊக்குவிப்புடன்...
பழகிய பலரின்
பாராட்டுதலுடன்...
தெரிந்தோரின்
தைரிய வார்த்தைகளுடன்.

எனக்குத்துணையாக வந்தன,
பல ஆயுதங்கள்...,
பல துணிக்கவங்கங்கள்...,
பல நினைவுகள்...,
பல கனவுகள்...

வீட்டு வாசலை விட்டு வெளியேறி
வேகமாய் பயணித்து
விடுதியில் நுழைந்தேன்,
வீரனாக.....

இரவில் இருப்பில்லை...
பகலில் படிப்பில்லை..

அதிகாலையில் அம்மாவின்
அதட்டலில்....
அசால்டாய் எழுந்து..
அவசரமாய் புறப்பட்டு...
அடித்து பிடித்து பயணித்து...
ஆனந்தமாய் கல்லூரியில் நுழையும்
அந்த நாளின் ஞாபகம்
அழகாய் என் நெஞ்சில்...

கடமைக்காக சாப்பிட..
நட்புடன் நடந்தேன்
நடுவுணவறைக்கு...

பெரிதான தட்டில்..
அன்னமிட்டு அமர்ந்தேன்
அதன் நடுவில்...............

"அய்வரும் அழகாய் அமர்ந்து
அன்னத்தை அளந்த..
அந்த நாள் ஞாபகம்..

தேவையில்லாமல் தமக்கையை
தவிக்கவிட்டு..
தாளம் தட்டும் தினங்கள்"

கனவு கலைந்தேன்.

அனைவரும் அகன்றிருந்தனர்..
நான் மட்டும், அன்னத்தை அகற்றி
நடுதட்டை நோக்கியிருந்தேன்...

கண்ணீரில் கைகழுவி
கல்லூரி சென்ற என்னைப்...
'பகடிவதை' - என்ற பெயரில்
பாடாய் படுத்தினார்கள்..

அன்னையின் அரவணைப்பில்...
ஆசையாய் அயர்ந்திருந்த
பாசமான அந்த நாட்களை
படுத்தால் மட்டுமே - எண்ணிப்
பார்க்கக்கூடிய மனநிலையில்
படுத்துறங்ககூட முடியாமல்
பாரத்தை அநுபவித்துக்கொண்டே....
படுக்கிறேன்...........

- இவண்
கார்த்தி

Sunday, May 3, 2009

தத்து(பித்து)வங்கள் ( ஹைக்கூ )

தத்து(பித்து)வங்கள் ( ஹைக்கூ )

நிலை: அவ்வப்போது தோன்றியவை...
வருடம்: 2001-2003

1. பாரம் சுமக்கும் போதுதான் அறிந்தேன்
  பாதையில் இத்தனை மேடு பள்ளங்கள்..

2. இரு இதயம் இணைகிறது இன்பமாய்......
    இறுதியில் - 
    இணைந்த இதயங்கள்
    இருட்டுக்குள்.

3. ஆடு:
  படைத்தவனுக்கே படைக்கப்பிறந்த
  பாவ ஜீவன்.............

இன்னும் பல......

இவண்,
கார்த்தி  
    

காதலின் பிடியில்....

நிலை: தனிமை
வருடம்: 2001 (இளங்கலைக்கு பிறகு, முதுகலைக்கு முன்பு)
குறிப்பு: காதலின் ஏக்கத்தில் எழுதப்பட்டது....

காதலின் பிடியில்....

சிறு பருவத்தில்
   சிரிப்பைக்காட்டும்...
விடலைப்பருவத்தில்
   விட்டு விட்டு தொடரும்...
கல்லூரிப்பருவத்தில்
   கவர்ந்திழுக்கும்.....
படித்து முடித்தபின்
   பாடாய்படுத்தும்....

இந்த பாழாய்போன காதல்.......

கவிதையில்லா கதை !! ( My first lyrics )

நிலை: 5 நாள் நாட்டு நலப்பணித்திட்ட முகாம், கோவை.
எழுதப்பட்ட வருடம்: 1999 ( கல்லூரி தொடக்கம், இருபதின் இறுக்கம் :) )
குறிப்பு: முதல் கவிதை ( கவிதை மாதிரி.. ஹா ஹா ).

நானே நான்!!

எனதிதயத்தில் முதல் அம்பு..
   விட்டவள் யாரோ நானறிவேன்..
அன்று விட்ட அம்பின் வலி
   இன்றும் என் நெஞ்சில்.....

கண்களின் பார்வையில்
   ஆயிரம் வார்த்தைகள்..
கருவளைய காந்தம் ஒரு
   கவர்ந்திலுக்கும் கலை...

பல பேரிடமும் பேசியுள்ள நான்
   உன்னிடம் மட்டும் உணர்ந்தது.. உலகை.
பாட்டை பாராட்டிய போது
   இதயம் கதறியது 'இவள்தான் உன்னவள்"

யார் அவள் ?....

எதற்காக இப்படி படுத்துகிறாள்..
எதற்காக என்னை சந்தித்தாள்..
எதற்காக என்னிடம் பேசினாள்..
ஏதற்காக என்னை இப்படி உளர வைத்தாள்...

இரண்டு நாள், எல்லோரிடமும் போலட்தான்
அவளிடமும் பழகினேன்..... அந்த
மூன்றாவது நாள், எங்கள் கண்களின் சந்திப்பு,
என் இதயத்தின் நிந்திப்பு...

என் மனம் எந்நேரமும் 
  அவளின் முகத்தையே
வருடிக்கொண்டிருப்பது
  அவளுக்கெப்படி தெரியும்..

ஒருவேளை...
இத்தனையும் பொய்யோ...
அத்தனையும் என் மன தூறல்தானோ ?..
என் மனக்கோட்டை,
இடியுமா... சிறப்புறுமா?

ஏமா ஹேமா !!!..
இதற்கு ஒரு முடிவுதான் என்னம்மா !!
நீ சொல்லம்மா !!!..

இவண்,
கார்த்தி........